Kogilavani / 2011 நவம்பர் 18 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக்கழக மாணவர்கள் 10 பேர் புதுமுக மாணவர்கள் மீது பகிடிவதையில் ஈடுபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையினால் அந்த மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழகம் நிர்வாகம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது
3ஆம் வருட மாணவர்களே இவ்வாறு பகிடி வதையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நுண்கலைப் பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களது அறிமுகவிழா நேற்று வியாழக்கிழமை பல்கலைக்கழக பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
அறிமுக விழாவில் கலந்துகொள்வதற்காக புதுமுக மாணவர்கள் மண்டபத்தில் அமர்ந்திருந்தவேளை அங்கு திடீரென வந்த 3ஆம் வருட மாணவர்கள் சிலர் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு புரிந்துள்ளனர்.
இதேவேளை, அங்கு வருகை தந்திருந்த பல்கலைக்கழக ஒழுக்காற்று நடவடிக்கை அதிகாரி, சிரேஷ்ட மாணவ அதிகாரி உள்ளிட்ட பல்கலைக்கழக உயரதிகாரிகளிடம் பகிவடிவதையில் ஈடுப்பட மாணவர்கள் அகப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
32 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
55 minute ago
1 hours ago