2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

யாழ். வீதி விபத்தில் உதவிப் பங்குத்தந்தை பலி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத், சுமித்தி)

புதுக்காட்டுச் சந்திக்கும் தாளையடிக்கு இடையில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற வீதிவிபத்தில் முல்லைத்தீவு உதவிப் பங்குத்தந்தை ஒருவர் பலியாகியுள்ளார்.

விபத்தில் பலியானவர் முல்லைத்தீவு உதவிப்பங்குத் தந்தையான 32 வயதுடடைய கீதபொன்கலன் லக்ஷ்மன் என் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றிரவு தாளையடிப்பகுதியில் இருந்து புதுக்கடம்டு சந்திநோக்கி வருகை தந்திருந்தபோது விதியில் இருந்த வேகத்தடை அவதானிக்காமல் அதன் மேலால் உந்துருளியைச் செலுத்த முற்பட்டபோது வேக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலத்தை பளை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

உயிரிழந்த பங்குத்தந்தையின் சடலம் பிரேதப்பரிசோதனைக்காக பளை வைத்தியசாலையினால் யாழ் போதானா வைத்திசாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .