2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

அச்சுறுத்தலினாலேயே மருத்துவ பீட கற்றல் முன்னெடுக்கப்படுகின்றது: எம்.பி சிறிதரன்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 21 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
 
யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீடங்களும் கல்விச் செயற்பாட்டினை புறக்கணிக்கும் நிலையில் மருத்துவ பீடம் கற்றல் செயற்பாட்டினை மேற்கொள்வது அச்சுறுத்தலின் காரணமே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
பல்கலைக்கழக மாணவர்களின் விடுவிக்கக் கோரி யாழ் நகரில் மேற்கொண்ட அடையாள உண்ணாவிரத த்தின் போது இதனை சுட்டிக் காட்டினார்.
அதேவேளை, பல்கலைக்கழக விடுதியில் மாணவிகள் தாக்கப்பட்டதுடன், விடுதியில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தததைக கண்டித்து மகளீர் அமைப்புக்கள் குரல் கொடுக்க வரவில்லை என்றும் இதன் போது சுட்டிக் காட்டினார்.
 
அத்துடன், எமது பிள்ளைகளின் கல்வியை அழிக்கும் முயற்சியில் இராணுவம் ஈடுபடுவதாகவும், இராணுவம் குறைப்பு என்று சொல்லும் அரசாங்கம் மேலும் இராணுவத்தினரை யாழ். மாவட்டத்தில் குவிப்பபதாகவும், இளைஞர்களுக்கு அச்சுறுத்தல் விடுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

  Comments - 0

 • wikki Saturday, 22 December 2012 03:38 AM

  தவளையும் தன் வாயால் கெடும். நாட்டுக்கு எதிராக கோசம் எழுப்பி கொண்டும் இராணுவத்தை சீண்டிகொண்டும் இருந்தால் இராணுவம் சும்மா இருந்துகொண்டு பூப்பறிக்கும் என்று எதிர் பார்கலாமா??? முதலில் யார் எதை செய்ய வேண்டும் என்பது உயர்கல்வி கட்கும் மாணவர்களுக்கு தெறிந்திருக்க வேண்டாம்??? கல்வி கட்க வேண்டிய இடத்தில் எதட்கு அரசியல் எதட்கு புலி பயங்கரவாதிகள் குறித்த வக்காளத்து??? பல்கலைகழகம் இராணுவத்தினால அல்ல அதில் கட்கும் மாணவர்கள் உங்களை போன்ற அரசியல்வாதிகளின் வார்தைகளில் மயங்கி செயட்படுவதினாலேயே அச்சுறுத்தலில் இருக்கின்றது. யாழ். பல்கலை கழகம் ஒரு தேசிய பல்கலைகழகம். அதில் சிங்கள தமிழ் முஸ்லிம் பேகர் என சகல இன மாணவர்களும் கல்வி கட்பதால் அந்த பல்கலைகழக நிர்வாகமும் மாணவர் சமூக செயட்பாடுகளும் சகல இனங்களையும் பிரதி நிதித்துவபடுத்தும் வகையில் இருக்க வேண்டும்

  Reply : 0       0

  wikki Saturday, 22 December 2012 03:39 AM

  இல்லையேல் இதையே சாட்டாக வைத்து ஏனைய இன மாணவர்கள் வெளியேறிவிட பல்கலைகழக தரநிர்ணயத்திட்கமைய எமது யாழ் பல்கலைகழகம் சகல இன மாணவர்களையும் கொண்டிருக்கா நிலையேட்பட்டு தேசிய பல்கலைகழகம் என்ற அந்தஸ்தை இழந்து பல்கலைகழக கல்லூரி அந்தஸ்திட்கு தரமிளக்கபட்டே சர்வதேச அளவில் அதன் சான்றிதல்களும் கட்கை நெறிகளும் நோக்கபடும் அபாயம் ஏட்படும்
  எனவே உங்கள் அரசியலுக்காக எமது மாணவர்களின் முன்னேற்றதிட்கு இருகின்ற ஒரே ஒரு உயர்கல்வி கூடத்தையும் தரமிளக்கவைத்து எம்மாணவர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தாதீர்கள். அரசியல் செய்ய நீங்கள் இருக்கிறீர்கள் ஆகவே மாணவர்களை கட்க விட்டு விடுங்கள் அல்லது அவர்களை அரசியல் வாதிகளாக மாற்றி விட்டு அரசியல் செய்ய வையுங்கள்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .