2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதானவர் விடுதலை

Kanagaraj   / 2013 பெப்ரவரி 07 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபரை யாழ். மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கடந்த 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 3ஆம் கட்டை ஆணைக்கோட்டையைச் சேர்ந்த  திருநாவுக்கரசு தினேஷ் ஆனந் என்பவர் அரச விரோத அமைப்பின் உறுப்பினர்களான சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த  பார்த்தீபன் மற்றும் காண்டிபன் ஆகியோருடன் இணைந்து ஆயுதப்பயிற்சி வழங்க முற்பட்டதாகவும், இத்தகவலை பொலிஸாருக்கு கொடுக்க தவறியதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மேற்படி வழக்கு, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதி யினால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி நிராகரிக்கப்பட்டது.

மேற்படி வழக்கினை, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் பிரதிவாதி குற்றமற்றவர் என கருதி விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

வழக்கு தொடுநர் சார்பில் அரச சட்டவாதி நளினி கந்தசாமி மற்றும் எதிரி சார்பில் மு. ரெமீடியஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--