2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற நால்வர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 21 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

சட்டவிரோத மின் பாவனையாளர்களெனக் கூறப்படும் 4 பேரை யாழ். பொலிஸார் நேற்று சனிக்கிழமை காலை கைதுசெய்துள்ளனர்.

யாழ். நீதிவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் 4 பேரை கைதுசெய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். பொலிஸாரும் இலங்கை மின்சார சபையினரும்; இணைந்து நடத்திய சோதனையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து மின்மானிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட இந்த 4 பேரையும்  யாழ். நீதிவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் முன்னிலையில் நேற்று சனிக்கிழமை மாலை ஆஜர்படுத்தியபோது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--