2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

பெண்ணின் மண்டையோடு, அணிகலன்கள் மீட்பு

Kanagaraj   / 2013 ஜூலை 26 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணொருவரின் மண்டையோடு மற்றும் அணிகலன்கள் மீட்கப்பட்டுள்ளன.

அச்சுவேலி வாதரவத்தை பகுதியிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் தெரிவித்தார்.

வாதரவத்தை பகுதியில் அமைந்துள்ள இராணுவ காவலரணிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்திலுள்ள காட்டு பகுதியிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன.

இளம் பெண்ணின் தோடுகள் மற்றும் தலைக்கு அணியும் கிளிப் வகைகள், செருப்புகள் மற்றும் ஆடைகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி கூறினார்.

குறித்த பகுதிக்கு ஆடு மேய்;ப்பதற்காக நேற்று காலை சென்ற நபரொருவர மண்டையோடு கிடப்பதை கண்டு அது தொடர்பில் அயலவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து  அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு தகவல்கள் கொடுக்கப்பட்டன.

அந்த தகவல்களை அடுத்து அவ்விடத்திற்கு சென்ற அச்சுவேலி பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் ஆகியோர் மண்டை ஓடுகள் மற்றும் நகைகளை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட இளம் யுவதி வேறு கிராமத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்ப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் யாழ்;. போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் பணிமனையுடன் தொடர்பு கொண்டு மீட்கப்பட்ட பொருட்களை இனங்காணுமாறும் சட்ட வைத்திய அதிகாரி பொது மக்களிடம் கோரியுள்ளார்.

மீட்கப்பட்ட இளம் பெண்ணின் மட்டை ஒடுகள் மற்றும் அணிகலன்கள் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .