2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

த.வி.கூ. உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம்

Kogilavani   / 2013 ஜூலை 29 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
சுமித்தி தங்கராசா> எஸ்.கே.பிரசாத்> நா.நவரத்தினராசா

தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர்கள் மூவர் இன்று திங்கட்கிழமை யாழ்.தந்தைசெல்வா சதுக்கத்தின் முன்னால் உண்ணாவிரத போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழர் விடுதலை கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான தங்க முகுந்தன், செல்வன் கந்தையா, செல்லையா விஜயரட்ணம்  ஆகியோரே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பானது வேட்பாளர்களை சாதி அடிப்படையில் தெரிவு செய்கின்றதென்றும் தமிழர் விடுதலை கூட்டணியில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகவும்  இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் இடம்பெறக்கூடாது என்பதை வலியுறுத்தியேமே மேற்படி மூவரும் இவ் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்று திங்கட்கிழமை மாலை 4 மணிவரை முன்னெடுக்கவுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றதாகவும் சாதியின் அடிப்படையில் வேட்பாளர் நியமித்துள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை நியமிப்பதாக வாக்குறுதி அளித்து விட்டு தற்போது அந்த வாக்குறுதியை மீறியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

வாக்கு தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு பல்வேறு குளறுபடிகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்காது, தனிப்பிட்ட விருப்பங்களின் பேரில், வேட்பாளர்கள் தெரிவு செய்துள்ளதை கண்டிப்பதாகவும், இவ்வாறு கண்மூடித்தனமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நடப்பதை நிறுத்தி தமிழ் மக்களுக்கு நியாயமான மற்றும் உறுதியான பதில்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவிக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரியுள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--