2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

தேர் கட்டிடத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 17 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


கோவிலின் தேர் கட்டிடத்திலிருந்து பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ்.,கே.கே.எஸ்.வீதி நாச்சிமார் தேர் கட்டிடத்தின் மேல்பகுதியிலிருந்தே இந்த சடலம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

தேர் கட்டிடத்தின் மேல்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக யாழ்.பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டதையடுத்தே பொலிஸார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

தலையில் அடிகாயங்களுடனும் முகம் எரிந்த நிலையிலும் இச்சடலம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணை சில நாட்களுக்கு முன்னர் கொலை செய்துவிட்டு சடலத்தை இங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--