2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, நா.நவரத்தினராசா

யாழ். நாச்சிமார் கோவில் பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தை அவரது மாமனார் அடையாளம் காட்டியுள்ளார்.

அரியாலை, நெடுங்;குளம் பகுதியைச் சேர்ந்த மார்க்கண்டு லோகராணி (வயது 45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணின் மாமனார் தெரிவிக்கையில்,

மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் யாழ். கொழும்புத்துறை கன்னியர்மடக் காப்பகத்தில் இந்தப் பெண் பராமரிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த 3ஆம் திகதி மேற்படி காப்பகத்தலிருந்து வெளியேறிய குறித்த பெண் நேற்று வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரைக் காணவில்லையென கடந்த 04ஆம் திகதி யாழ். பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்ணின் பெரியம்மாவினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறினார்.

யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸார் மரணம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--