2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

வைத்தீஸ்வராக் கல்லூரியின் நூற்றாண்டு விழா

Kogilavani   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


குணசேகரன் சுரேன்


யாழ்.வைத்தீஸ்வராக் கல்லூரியின் நூற்றாண்டு விழா புதன்கிழமை (23) காலை  நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் மு.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நூற்றாண்டு விழா நிகழ்வில் 'வைத்தீஸ்வரம்'  என்னும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் வ.செல்வராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் மா.சின்னத்தம்பி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கல்லூரி 1913 ஆம் ஆண்டு எஸ்.நாகமுத்து என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--