2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

வீட்டில் கொள்ளை: கோடரி வெட்டில் மூவர் காயம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, நா.நவரத்தினராசா

ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவர் கோடரியால் வெட்டப்பட்டுள்ளதுடன் அவர்களது வீட்டிலிருந்து பெறுமதி வாய்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமொன்று புதன்கிழமை (04) இரவு யாழ். உடுவிலில் நடைபெற்றுள்ளது.

யாழ். உடுவில், கற்குளப் பிள்ளையார் கோவிலடியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் மேற்படி பிரதேசத்தை சேர்ந்த எஸ்.சண்முகநாதன் (51), சண்முகநாதன் ஞானேஸ்வரி (48), சண்முகநாதன் யதுர்ஷன் ஆகியோரே படுகாயமடைந்த நிலையில்  யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் பெறுமதி தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .