2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்

Kogilavani   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


வலி.தெற்கு சுன்னாகம் பிரதேசசபை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் நேற்று வியாழக்கிழமை (05) பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.

சுன்னாகம் பொது நூலக பொறுப்பதிகாரி ந.கனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.இராமநாதன் கல்லூரி அதிபர் கமலராணி கிருஷ;ணபிள்ளை, சிறப்பு விருந்தினர்களாக வலி.தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தி.பிரகாஷ், உடுவில் சமுர்த்தி மகாசங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஆனந்தகௌரி ஜெயக்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வலி.தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேச பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் மாணவர்களது கலை நிகழ்வும் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .