2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

வீதிக்கு குறுக்கே நாய் பாய்ந்ததில் பெண் படுகாயம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

மோட்டார் சைக்கிளின் முன்பாக நாய் பாய்ந்ததில் விபத்துக்குள்ளாகிய நிலையில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை (05) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.மாவைகலட்டிப் பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை சரஸ்வதி (54) என்பவரே விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று (05)  மாலை தனது தயாரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிகொண்டு உறவினர் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த வேளையில் வீதிக்கு குறுக்கே நாய் பாய்ந்ததில் மோட்டார் சைக்கிள் சறுக்குண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த இளைஞன் நேற்று (05) காலை தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது வேறொரு நாய் வீதிக்கு குறுக்கே பாய்ந்ததில் குறித்த இளைஞனும் நண்பனும் சிறுகாயமடைந்து அருகாமையிலுள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .