2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

யாழ்.கோ பால் பண்ணையாளர்கள் போராட்டம்

Super User   / 2014 மார்ச் 23 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


தங்களுக்கு கிடைக்கவேண்டி பாலின் விலையினை முழுமையாகத் தரும்படியும், யாழ்.கோ நிர்வாகச் சீரின்மையினையும் கண்டித்து யாழ்.கோ நிறுவனத்திற்கு பால் வழங்கும் பால் பண்ணையாளர்கள் இன்று (23) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமாகாண கால்நடை விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஜங்கரநேசன் பால் கொள்வனவு செய்யும் விலையினை 48 ரூபாவிலிருந்து 58 ஆக அதிகரிக்கும் படி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், 14 நாட்களுக்குள் வெளியிடப்படவேண்டிய பால் விலை அதிகரிப்பிற்கான சுற்றறிக்கையினை யாழ்.கோ நிறுவனம் வெளியிடாமலும், தங்களுக்கு அதிகரித்த விலையில் 7 ரூபாவினை மட்டும் தருவதாகவும் கூறி பால் பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்.கோ நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகம் 3 பேருடன் நடைபெற்று வருகின்றதாகவும், ஒரு நிர்வாகத்தில் 9 பேர் கொண்ட உறுப்பினர்கள் இருக்க வேண்டுமென்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

இதன்போது, தீவன விலை, வைக்கோல் விலைகள் ஏறியுள்ள நிலையில் பாலிற்கு உரிய விலை கிடைக்காமையினால் தங்கள் ஜீவனோபாயம் கஷ்ரமாக இருப்பதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.
வடமாகாண கால்நடை மற்றும் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஊடாக வடமாகாண முதலமைச்சருக்கு மகஜர் ஒன்றினை கையளிக்கவுள்ளதாகவும், அதற்கான பதில் கிடைக்காவிடின் வடமாகாண சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் பால் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

யாழ்.மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால்பண்ணையாளர்கள் இருப்பதுடன், அவர்களின் 800 பேர் வரையில் யாழ்.கோ நிறுவனத்திற்கு பாலினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .