2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

பருத்தித்துறை - கொடிகாமம் சேவையில் புதிய இ.போ.ச பேருந்து

Kogilavani   / 2014 மார்ச் 24 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

பருத்தித்துறையிலிருந்து கொடிகாமம் செல்லும் பேருந்து சேவையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் புதிய பேருந்து ஒன்றினை சேவையில் ஈடுபடுத்தி வருவதாக இலங்கைப் போக்குவரத்துக்கு சபையின் பருத்தித்துறை சாலையின் முகாமையாளர் எஸ்.கே.கந்தசாமி திங்கட்கிழமை (24) தெரிவித்தார்.

மேற்படி பாதையில் பல ஆண்டுகளாக சேவையில் ஈடுபட்ட தட்டிவான் சேவையை முடிவுக்கு கொண்டு வந்த தனியார் மினிபஸ் சங்கத்தினர் புதிய மினிபஸ்களை சேவையில் ஈடுபடுத்தி வந்தனர்.

இந்நிலையில் இ.போ.சபையின் பருத்தித்துறை சாலையினர் யுத்தத்திற்கு முன்னரும் சரி பின்னரும் சரி மிக பழமை வாய்ந்த பேருந்துகளையே குறித்த சேவையில் ஈடுபடுத்தி வந்தது.

இதனால் அதிருப்தியடைந்த பயணிகள் உரிய பேருந்துக்களை சேவையில் ஈடுபடுத்துமாறு இ.போ.சபையின் பருத்தித்துறைசாலைக்கு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து, அண்மைக்காலத்தில் 10 இற்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் இ.போ.ச சபையின் பருத்தித்துறைசாலைக்கு கிடைத்திருந்தன.

இதில் ஒரு பேருந்தை கடந்த வாரம் முதல் குறித்த சேவையில் ஈடுபடுத்தி வருவதாக முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .