2021 மார்ச் 04, வியாழக்கிழமை

துவிச்சக்கர வண்டி திருடனுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 மார்ச் 24 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.பகவான்

தென்மராட்சி பிரதேசத்தில் நீண்ட காலமாக துவிச்சக்கர வண்டிகளை திருடி வந்த சந்தேக நபரை எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் இன்று (24) உத்தரவிட்டார்.

மீசாலை வடக்கு வேம்பிராய் பகுதியில் தோட்டம் செய்யும் விவசாயி ஒருவர் நேற்று (23) காலை தனது சைக்கிளை வீதியோராமாக நிறுத்தி விட்டு தோட்டத்திற்கு சென்று பயிர்களுக்கு நீர் இறைந்துள்ளார்.

அந்தசமயம், குறித்த நபர் துவிச்சக்கர வண்டியின் பூட்டினை திறந்து எடுத்துக்கொண்டு சாவகச்சேரி டச்சு வீதியில் சென்ற வேளையில், அங்கு தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவன் தனது தந்தையின் துவிச்சக்கரவண்டியென அவதானித்து விட்டு, குறித்த நபரை மறித்து விசாரித்துள்ளார்.

திருடன் சொல்வதறியாது தடுமாறவே அங்கு நின்றவர்கள் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் குறித்த நபரை விசாரித்த வேளையில், குறித்த நபர் ஏற்கனவே பல துவிச்சக்கர வண்டிகள் திருட்டு சம்பவத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

குறித்த நபரை இன்று (24) சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது, நீதவான் மேற்படி உத்தரவினை பிறப்பித்தார்.
 
 
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .