2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிளினைக் காணவில்லை: பொலிஸார் சந்தேகம்

Super User   / 2014 மார்ச் 25 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். புன்னாலைக்கட்டுவான் பலாலி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தரித்து நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்று திங்கட்கிழமை (24) திருடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளரான எஸ்.பார்த்தீன் என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (25) சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட போது, மோட்டார் சைக்கிள் உரிமையாளரிடம் சாரதி அனுமதிப்பத்திரம், வீதி அனுமதிப்பத்திரம், காப்புறுதி அனுமதிப்பத்திரம் எதுவும் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்திருந்தமை தெரியவந்தது.

இந்நிலையில், குறித்த நபரின் மோட்டார் சைக்கிள் உண்மையில் திருடப்பட்டுள்ளதா? அல்லது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக குறித்த நபர் பொய் உரைத்துள்ளரா? என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .