2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

'டக்ளஸின் தீர்மானங்களை ஆராய வேண்டாம்'

Kogilavani   / 2014 மார்ச் 27 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். கண்டி வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பது குறித்து யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கே.என்.டக்ளஸ் தேவானாந்தாவினால் ஆராயப்பட்டு வருகின்ற நிலையில் சபையில் அந்த விடயங்களை வாதிடுவதை தவிர்க்குமாறு யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா வியாழக்கிழமை (27) தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம்  வியாழக்கிழமை (27) யாழ்.மாநகர முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அதன்போது, யாழ்.கண்டி வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான அனுமதி யாழ்.மாநகர முதல்வர் மற்றும் மாநகர ஆணையாளர் செ.பிரணவநாதன் ஆகியோரினால் வழங்கப்பட்ட நிலையில்,

'தற்போது எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த எரிபொருள் நிலையத்தினை அமைக்க முற்பட்ட செஞ்சிலுவை சங்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து நட்;டஈடு வழங்குமாறு கோரிக்கை விடுத்தால், அந்த நஷ;டஈட்டினை மாநகர சபை வழங்க வேண்டும். அது முடியுமா' என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த முதலவர்

'யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடத்திய கூட்டத்தின்போது, எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பது குறித்து பொதுமக்களின் கருத்துக்களையும், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களின் கருத்துக்களையும் ஆராய்ந்தார்.

எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பது குறித்து குழுவொன்று நியமித்து ஆராய்ந்து வருவதுடன், நீதிமன்றத்தினூடாக பிரச்சினையினை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இங்கு (மாநகர சபையில்) அந்த விடயம் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் வேண்டாமென்று  கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .