2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

தீர்மானம் தமிழர்களுக்கு நன்மையளிக்காது : கஜேந்திரன்

Kanagaraj   / 2014 மார்ச் 29 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

ஜெனிவாத் தீர்மானம் அரசுக்கு எதிரானதென்றோ அல்லது தமிழர்களுக்கு நன்மையளிப்பது என்றோ கூறமுடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

ஜெனிவாக் கூட்டத் தொடர்பாக சனிக்கிழமை (29) கருத்துத் தெரிவிக்கையிலே கஜேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் உள்ளக விசாரணை வேண்டும் என்ற ரீதியிலே ஜெனிவாத் தீர்மானம் அமைந்திருந்தது. அத்துடன், இது இனப்பிரச்சினையென்று இல்லாமல் இலங்கையிலுள்ள சிறுபான்மையினருக்கான மதப் பிரச்சினை என்ற ரீதியிலே இருந்தது.

ஜெனிவாத் தீர்மானத்தின் நகலில் வடமாகாணத்திற்கு போதியளவு அதிகாரங்களை வழங்கவேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. எனினும் பாகிஸ்தானின் தலையீட்டினால் அது மாற்றம் செய்யப்பட்டு இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும்
அதிகாரங்கள் சட்டரீதியாக ஏற்படுத்தவேண்டும் என மாற்றப்பட்டுள்ளது.

அத்துடன், ஜெனிவாத் தீர்மானத்தில் தமிழ் என்ற சொல் கதைக்கப்படவேயில்லை. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன், வடபகுதியில் இராணுவ, சிங்களக் குடியேற்றங்கள் நில அபகரிப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவில்லை.

ஜெனிவாக் கூட்டத் தொடர்ந்து நடந்துகொண்டிருந்த அதேதருணம் வடபகுதியில் தமிழர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கையும் சுற்றிவளைப்புக்களும் இடம்பெற்றதாக அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .