2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

இறால் உற்பத்தி குறைவினால் மீனவர்கள் பாதிப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அரசரட்ணம்

பருவ மழையின்மை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கடல்நீரேரிகளில் இறால் உற்பத்தி குறைவடைந்துள்ளமையால் அதனை நம்பி வாழும் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் போதிய வருமானம் அற்று இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளர் ஆர்.ரவீந்திரன் வியாழக்கிழமை (10) தெரிவித்தார்.

இருந்தும், சேவாலங்கா உள்ளிட்ட சில நிறுவனங்கள் இவர்களுக்கு சிறிதளவு உதவிகளைச் செய்து வருகின்றதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கடல்நீர் ஏரிகளில் இறால் மீன்பிடி இம்முறை எவ்வாறானதொரு நிலையில் இருக்கின்றது என்பது தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்ட கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

'கிளாலி, ஆனையிறவு கேரதீவு, தர்மபுரம், தட்டுவன்கொட்டி, பிரமந்தனாறு, தங்கத்தான் வயல், நாகேந்திரபுரம் உள்ளிட்ட 10 இற்கும் மேற்பட்ட கிராம மக்களின் ஜீவனோபாயத் தொழிலாக இறால் மீன்பிடி காணப்படுகின்றது.

2012 இறுதியில் பெய்த போதியளவு பருவமழை காரணமாக 2013 ஆம் ஆண்டில் இப்பகுதியில் இறால் மீன்பிடியில் ஈடுபட்டர்கள் வருடத்திற்கு 4,00,000 ரூபா வரையில் வருமானம் பெற்று வந்தனர்.

ஆனால் 2013 ஆம் ஆண்டு இறுதியில் போதியளவு பருவமழையின்மையினால் கடல்நீரேரரிகளில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும் இறால்கள் மழையின்மையினால் இனப்பெருக்கம் குறைந்து இறால் உற்பத்தியும் குறைவடைந்துள்ளது.

இதனால் அதனை நம்பி வாழ்ந்தவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றது' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--