2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

வடமாகாண எதிர்க்கட்சி உறுப்பினராக தவராசா நியமனம்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான சின்னத்துரை தவராசா நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நியமனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

சிறையிலிருக்கும் கந்தசாமி கமலேந்திரனுக்கு பதிலாகவே வடமாகாண சபை உறுப்பினராக தவராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு 9803 விருப்பு வாக்குகளைப் பெற்று 3ஆம் இடத்தை பெற்றுகொண்டார்.

நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட கொலை வழக்கில் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் பிரதான குற்றவாளியாக கடந்த 3 மாதங்களாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனால், கமலேந்திரனை ஈழமக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து கட்சியின் செயஷக்ளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தாக் நீக்கினார். 

தொடர்ந்து, தேர்தலில் கமலேந்திரன் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் கட்சியிலிருந்தும் வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் கமலேந்திரனை நீக்கியது. 

இதனால், வடமாகாண சபை உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி நியமனம் பூரணப்படுத்தப்படாத நிஇஷயில் இருந்தது.

இந்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரினால் அவருக்கான நியமனக்கடிதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X