2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 11 , பி.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்.உசன் மிருசுவில் பகுதியில் வீதியோரமாக நின்றிருந்த முச்சக்கரவண்டியினை பின்னால் வந்த வான் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்து வெள்ளிக்கிழமை (11) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

மிருசுவில் ஆயத்தடியினைச் சேர்ந்த தங்கமயில் சசிதரன் (33) என்பவரே படுகாயமடைந்தவராவார்.

வீதியோரத்தில் நின்றிருந்த முச்சக்கரவண்டியின் மீது பின்னால் வந்த வான் மோதியதில் முச்சக்கரவண்டி வீடொன்றின் மதிலினை உடைத்துக் கொண்டு வீட்டின் வளவுக்குள் சென்றமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வான் சாரதியினைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X