2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

நிபுணர் குழு அறிக்கை எமக்கு கிடைக்கவில்லை: நீர்வழங்கல் சபை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 12 , மு.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சொர்ணகுமார் சொரூபன், சுமித்தி தங்கராசா, எஸ்.ஜெகநாதன்)

இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்கல் தொடர்பாக வடமாகாண சபை உருவாக்கிய நிபுணர் குழுவின் முடிவுகள் குறித்து நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு இதுவரையில் உத்தியோக பூர்வமாக வடமாகாண சபை அறிவிக்கவில்லையென நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் சமூகவியளாலர் ரி.பாலசுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்று  சபை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சமூகவியளாலர் ரி.பாலசுப்பிரமணியம், நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் பிரதான பொருளியலாலர் எஸ். பாலேந்திரன், நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் ஆலோசகர் பேராசிரியர் எஸ்.நந்தகுமாரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்பில் 'வடமாகாணசபையினால் இரணைமடு குடிநீர் விநியோகம் தொடர்பாக நிபுணர் குழு ஒன்றை அமைத்திருந்தது. இந்நிலையில் அவ்வறிக்கை முடிவுகள் தொடர்பாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை நிலைப்பாடு என்ன?' என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே பாலசுப்பிரமணியம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 'குறித்த நிபுணர் குழு, இத்திட்டம் தொடர்பாக நீரில் நைத்திரேரின் செறிவு மற்றும் சிறுபோக செய்கையின் பாதிப்பு தொடர்பான விளக்கங்களினையே எம்மிடம் கேட்டிருந்தனர். நாம் அதற்கான விளங்கங்களினை வழங்கியிருந்தோம். 

இந்நிலையில் நிபுணர் குழுவின் முடிவுகள் தொடர்பாக நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்திருக்கின்றோமே தவிர வடமாகாண சபை எமக்கு உத்தியோக பூர்வமாக எந்தவொரு அறிவித்தலையும் வழங்கவில்லையெனத் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் நிபுணர் குழு முதலமைச்சரால் நியமிக்கப்பட்டதல்ல அது விவசாய அமைச்சரினால் நியமக்கப்பட்டது என்றும் நிபுணர்குழு முடிவுகள் கிடைக்கும் வரை எமது பணிகளினை ஸ்தம்பிக்காது நாம் பணிகளினை முன்னெடுத்து வருகின்றோம் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து நந்தகுமார் கருத்துத் தெரிவிக்கையில்,

'இரணைமடு குடிநீர் விநியோகம் தொடர்பில் சில அரசியல்வாதிகளுடன் தனிப்பட்ட முறையில் கதைக்கும் போது அவர்கள் இத்திட்டத்தினை ஆதரிக்கின்றனர். ஆனால் பொது இடங்களில் பேசும் போது மாற்றுக்கருத்துக்களை அவர்கள் முன்வைக்கின்றனர் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து எஸ்.பாலேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், 

வடமாகாண சபையின் நிபுணர் குழுவின் முடிவுகள் பற்றி பல கருத்துக்கள் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்தன இருந்தும் எமக்கு எழுத்து மூலத்தில் உத்தியோகபூர்வமாக அறியத்தரவில்லை.
 
இத்திட்டமானது இரணைமடு குளப் புனரமைப்பு, நீர்வழங்கல், யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மலசல கழிவு அகற்றல்  என்பன இத்திட்டத்தினுடை ஒருங்கிணைப்புத் திட்டங்களாகும்.
ஆனால், இதனைப் பிரித்து செய்யுமாறு வடமாகாண சபை கூறுகின்றது. அதாவது குளத்தை புளரமைக்குமாறும் நீரை குளத்தில் இருந்து பெறவேண்டாம் என்றும் கூறுகின்றது. இது சாத்தியம் அற்ற விடயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X