2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் புதுவருட நிகழ்வு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ், சிங்கள புத்தாண்டையொட்டி சிறுவர்களுக்காக, இராணுவத்தினரால் ஏற்பாடு செயய்யப்பட்டிருந்த புதுவருட நிகழ்வு நேற்று(14) கோணங்குளம் மைதானத்தில் இடம்பெற்றது.

பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா மற்றும் 51ஆவது படைப் பிரிவின் காட்டளைத் தளபதி உட்பட இராணுவத்தினர், பொதுமக்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இணுவில் தேவாலய பங்குதந்தை வசந்தகுமார், தெல்லிப்பளை பிரதேச செயலாலர் ஸ்ரீ மோகனன் மற்றும் சங்கிலிப்பாய் பிரதேச செயலாலர் எஸ் முரளிரன் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பெருமளவிலான சிறுவர்கள் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டுக்களில் பங்குபற்றியதுடன் இதற்கு பிரதேச பொதுமக்கள் தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X