2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

யாழ்.சாலைக்கு புதிய பேருந்துகள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை : டக்ளஸ்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்.சாலைக்கு இலங்கை போக்குவரத்துச் சபையின் புதிய பேருந்துகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், பேரூந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் விசேட செயலமர்வுகள் மற்றும் பயிற்சி வகுப்புக்களை நடத்துவதற்கான திட்டங்களை ஏற்படுத்தவுள்ளதாகவும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கோண்டாவிலில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய தலைமைக் காரியாலயத்தில் புதன்கிழமை (16) தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

யாழ்.சாலையின் வருவாயை அதிகரிக்கும் முகமாகவும் அதனூடாக சாலை ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான செயற்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க நாம் பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளோம்.

அந்தவகையில் அனைவரும் ஐக்கியத்துடனும், புரிந்துணர்வுடனும் விட்டுக் கொடுப்புடனும் கடமைகளைசிறப்பாக செய்ய வேண்டும்.
போக்குவரத்து சேவையானது மக்களுக்கான அத்தியாவசிய தேவையாக உள்ளதால் இச்சேவையை நீங்கள் யாவரும் உணர்ந்து செயற்படும் போதே அதனூடாக மக்கள் முழுமையான பலனை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்நிலையில் மக்களுக்கான போக்குவரத்து சேவைகளை இலகுபடுத்தும் வகையில் யாழ்ப்பாணம், காரைநகர், பருத்தித்துறை ஆகிய சாலைகளுக்கு புதிய பேருந்துகளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை,இங்குள்ள சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் விசேட செயலமர்வுகள் மற்றும் பயிற்சி வகுப்புக்களை நடாத்துவதற்கான திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளோம்.

யாழ்.சாலையின் தொழிற்துறைசார்ந்த நடவடிக்கைகள் ஏனைய சாலைகளுக்கு மட்டுமன்றி ஏனைய மாவட்டங்களின் சாலைகளுக்கும் முன்மாதிரியாக அமையப் பெறுதல் வேண்டும் என்பதுடன், சேவையில் ஈடுபடும் பேருந்துகள் அனைத்தும் சிறந்த முறையில் பராமரிக்கப்படுதல் வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

உத்தியோகத்தர்களது தேவைகள் கோரிக்கைகள் தொடர்பிலும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார். இந்நிகழ்வில் யாழ்.சாலை ஊழியர் சங்கத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--