2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

காரைநகர் தோப்புக்காடு பிரதேசத்திற்கான மின்னிணைப்பை ஆரம்பித்து வைத்தார் டக்ளஸ்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


காரைநகர் தோப்புக்காடு பிரதேசத்திற்கான மின்னிணைப்பை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தியோகபூர்வமாக வெள்ளிக்கிழமை (18) ஆரம்பித்து வைத்தார்.

முழுநாடும் ஒளிபெறுகின்றது என்ற கருத்திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினதும்; மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி, பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர ஆகியோரின் வழிகாட்டலுக்கு அமைவாக வடக்கின் வசந்தம் கிராமிய மின்வழங்கல் திட்டத்தின் கீழ் இம்மின்னிணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

வடக்கின் வசந்தத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்காக 7.2 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ள அதேவேளை, தோப்புக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 189 குடும்பங்கள் மின்னிணைப்பை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக மின்னிணைப்பை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அதிதிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
தமது பகுதிக்கான மின்னிணைப்பை பெற்றுத் தருவதற்கு வழிவகை செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அப்பகுதி மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் வடக்கின் வசந்தம் திட்டப் பணிப்பாளர் குணசீலன், பிராந்திய மின் பொறியியலாளர் ஞானகணேசன், மின்அத்தியட்சகர் அருள்நாதன், காரைநகர் பிரதேச செயலர் திருமதி தேவநந்தினி பாபு, ஊர்காவற்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி வீரசிங்கம், ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச இணைப்பாளரும், காரைநகர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான கண்ணன்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--