2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.குகன் 


யாழ். சுன்னாகம் லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் 78ஆம் அணியின் 11 மருத்துவ மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளக அரங்கில் சனிக்கிழமை (19) நடைபெற்றது.

வட இலங்கை சுதேச வைத்திய சபையின் ஏற்பாட்டில், வட இலங்கை சுதேச வைத்திய சபையின் தேர்வுச் சபைப் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி ந.யோகராஜன் தலைமையில் இப்பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதன்போது லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் 30 வருடங்களுக்கும் மேலாகச் சேவையாற்றி கல்லூரியை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்சென்ற கல்லூரியின்  முன்னாள் அதிபர் வைத்திய கலாநிதி கமலலோஜினி பரமசிவம்  'மருத்துவக்கல்லூரி அன்னை' என்ற சிறப்புப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அத்துடன்,  லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியை நவீன முறையில் வளர்சிப்பாதைக்கு இட்டுச் செல்கின்ற பேராசிரியர் ந.யோகராஜனும் கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் வடமாகாண சுதேச வைத்தியசபை தலைவர் வைத்திய கலாநிதி எஸ்.விக்னேஸ்வரா, வடமாகாண  சுதேச வைத்தியசபை செயலாளர் வைத்திய கலாநிதி ஜெ.ஜெயலன், லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முன்னாள் அதிபர் வைத்திய கலாநிதி திருமதி கமலலோஜினி பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--