2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வைத்தியசாலைக்கு சென்றவரை காணவில்லை

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கடந்த புதன்கிழமை (16) சென்றவர் குடும்பஸ்தர், இன்னமும் வீடு திரும்பவில்லையென அவரது உறவினர்களினால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் நேற்று (22) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரி, கல்வயல் பகுதியைச் சேர்ந்த இராமலிங்கம் செல்வரத்தினம் (வயது 68) என்பவரே இவ்வாறு காணாமற்போனவராவார்.

குறித்த நபர் மனநோய் சிகிச்சைக்காகவே வைத்தியசாலைக்குச் சென்றிருந்ததாக உறவினர்கள் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர் என்றும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .