2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

மஹிந்தோதய இடைநிலை பாடசாலைகளின் ஆய்வு கூடங்கள் திறப்பு

Super User   / 2014 ஏப்ரல் 23 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா

மகிந்த சிந்தனையின் மஹிந்தோதயா (இசுறு திட்டம்) 1000 இடைநிலை பாடசாலைகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்;டத்தின் இரண்டு பாடசாலைகளில் அமைக்கப்பட்ட பௌதீக வளங்களை (ஆய்வுகூடங்கள்) மத்திய கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று (23) திறந்து வைத்தார்.

யாழ்.புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி மற்றும் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி ஆகியவற்றிலேயே இந்த ஆய்வுகூடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி வேலைத்திட்டத்தில் வடமாகாணத்தில் 17 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றில் 16 பாடசாலைகளுக்கு தலா 35 மில்லியன் ரூபா நிதியும், கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு 50 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இதனடிப்படையில் இந்த வேலைத்திட்டங்கள் முடிவடைந்த இரண்டு பாடசாலைகளின் பௌதீக வளங்கள் இன்று (23) திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி திட்டத்திற்கான நிதியினை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கை ஜனாதிபதி கடனாகப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், கல்வியியலாளர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X