2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

மீண்டும் தெரிவானார் வசந்தி அரசரட்ணம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி தங்கராசா

யாழ். பல்கலைக்கழத்தின் 9 ஆவது துணைவேந்தராக மீண்டும் இரண்டாவது தடவையாக வசந்தி அரசரட்ணம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (24) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்திற்கு 9 ஆவது துணைவேந்தரை தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த மார்ச் 8 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
 
இந்த துணைவேந்தர் பதவிக்காக வசந்தி அரசரட்ணம், பேராசிரியர் குணபாலன், பேராசிரியர் விக்னேஸ்வரன், பேராசிரியர் ஆழ்வார்பிள்ளை, ரட்ணஜீவன் கூல் ஆகியோர் போட்டியிட்டனர். துணைவேந்தர் தெரிவிற்கான தேர்தலில் பல்கலைக்கழக மூதவைப் பேரவைக் குழு உறுப்பினர்கள் 25 பேர் தலா 3 வாக்குகள் வீதம் வாக்களித்தனர்.
 
இதில் வசந்தி அரசட்ணத்திற்கு 24 வாக்குகளும், குணபாலனுக்கு 16 வாக்குகளும், விக்னேஸ்வரனுக்கு 13 வாக்குகளும், ஆழ்வார் பிள்ளை, ரட்ணஜீவன் கூல் ஆகியோருக்கு தலா 2 வாக்குகளும் கிடைத்தன.
 
வாக்கு எண்ணிக்கையில் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஆணைக்குழு பரிசீலனை மேற்கொண்டு, உயர்கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைத்தது. தொடர்ந்து உயர்கல்வி அமைச்சு தங்கள் பரிசீலனைகளை மேற்கொண்டு, ஜனாதிபதியிடம் கையளித்த நிலையில் ஜனாதிபதி வசந்தி அரசரட்ணத்தை தெரிவு செய்துள்ளார்.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--