2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

குடும்பத்தை மிரட்டி சிறுமி துஷ்பிரயோகம்

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 26 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா
குடும்பத்தாரை கொலை செய்வோம் என மிரட்டி 17 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பவம் கடந்த 22ஆம் திகதி அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பெண்கள் அமைப்பினர் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (26) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

அரியாலை முள்ளி வீதியை சேர்ந்த மேற்படி 17 வயது சிறுமி தனது சகோதரியின் வீட்டிற்கு கடந்த தீபாவளி தினத்தன்று மாலை சென்றுள்ளார்.

இதன்போது, அங்கு வந்த 28 வயதுடைய அதேயிடத்தை சேர்ந்த ஏற்கெனவே திருமணமான நபர், சிறுமியின் சகோதரியை அடித்ததுடன், சிறுமியை அடித்து பூம்புகார் பகுதியிலுள்ள பற்றைக்குள் இழுத்து சென்று அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பில் வெளியில் தெரிவித்தால் குடும்பத்தையே கொலை செய்வதாக மிரட்டி சம்பவத்தை வெளியில் தெரியவராமல் தடுத்துள்ளார். மேலும் சிறுமியை கடத்தி சென்று தனது தாய் வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் தாயார், தனது மகளை காணவில்லையென யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் 23ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.
தாயாரின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சிறுமியை மறைத்து வைத்திருந்த வீட்டிலிருந்து அச்சிறுமியை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமியை அனுமதித்தனர்.

சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டப்பட்ட சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பில்  யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்;டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .