2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

சிறுமியை அச்சுறுத்தி துஷ்பிரயோகம் செய்தவர் கைது

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 28 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதியில் குடும்பத்தாரை கொலை செய்வோம் என அச்சுறுத்தி 17 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய 28 வயதுடைய சந்தேகநபரை திங்கட்கிழமை (27) மாலை கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் செவ்வாய்க்கிழமை (28) தெரிவித்தனர்.

சந்தேகநபர், பூம்புகார் காட்டுப் பகுதியில் மறைந்திருந்த நிலையில், பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

அரியாலை, முள்ளி வீதியைச் சேர்ந்த மேற்படி 17 வயது சிறுமி தனது சகோதரியின் வீட்டுக்கு கடந்த தீபாவளி தினத்தன்று மாலை சென்றுள்ளார்.

இதன்போது, அங்கு வந்த அதேயிடத்தைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபர், சிறுமியின் சகோதரியை அடித்ததுடன் சிறுமியை அடித்து இழுத்துச் சென்று, பூம்புகார் பகுதியிலுள்ள பற்றைக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

தொடர்ந்து, இது தொடர்பில் வெளியில் தெரிவித்தால் குடும்பத்தார் அனைவரையும் கொலை செய்வதாக அச்சுறுத்தி சம்பவத்தை வெளியில் தெரியவராமல் தடுத்துள்ளார். மேலும் சிறுமியை கடத்திச் சென்று தனது தாய் வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் தாயார், கடந்த 23ஆம் திகதி தனது மகளை காணவில்லையென யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

தாயாரின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சிறுமியை மறைத்து வைத்திருந்த வீட்டிலிருந்து சிறுமியை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமியை அனுமதித்தனர்.

இருந்தும், சந்தேகநபர் தப்பித்து தலைமறைவாகியிருந்தார். இந்நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரை திங்கட்கிழமை (27) மாலை கைது செய்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .