Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
இலங்கையின் 67ஆவது சுதந்திர தினமான இன்று, சுன்னாகம் ஜயனார் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஐயனார் சன சமூக நிலைய மண்டபத்தில், புதன்கிழமை (04) நடைபெற்றது.
தெல்லிப்;பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியின் இரத்த தேவையை கருத்திற்கொண்டு இடம்பெற்ற இந்த இரத்தான முகாமில் சுமார் 30க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் இரத்தானம் வழங்கினர்.
இரத்தங்களை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியினர் சேகரித்துச் சென்றனர்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி எஸ்.பிரதீபன், இளைஞர் சேவைகள் மன்ற யாழ். மாவட்ட அலுவலர் திருமதி விநோதினி மேனனன், சுன்னாகம் சந்திர சேகர பிள்ளையார் ஆலய குரு சிவஸ்ரீ குமரன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
20 minute ago
30 minute ago
38 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
30 minute ago
38 minute ago
53 minute ago