2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பாலத்துக்குள் தூக்கி வீசப்பட்ட முச்சக்கரவண்டி

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ்.வல்வை பாலத்தடி பகுதியில் டிமோ ரக வாகனம் மோதி, முச்சக்கரவண்டி தூக்கி வீசப்பட்டத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் புதன்கிழமை (04) அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

மந்திகை பகுதியை சேர்ந்த துரைராஜா சாரங்கன் (வயது 25) என்பவரே படுகாயமடைந்தார்.

நெல்லியடியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியை பின்னால், வந்த டிமோ வாகனம் மோதியதில். படுகாயமடைந்த சாரதி முதலில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .