2021 மே 08, சனிக்கிழமை

பூந்தொட்டிகள் இடித்தழிப்பு

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். மணிக்கூட்டு கோபுர வீதியில் அழகுக்காக வீதியின் நடுவில் கட்டப்பட்டு இருந்த கட்டுக்களும் மூன்று பூந்தொட்டிகளும் இனம்தெரியாதவர்களால் இடித்தழிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையினால் நகரினை அழகுபடுத்தும் நோக்குடன் மணிக்கூடு வீதியில் மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து வைத்தியசாலை வீதி வரையில் வீதியின் நடுவில் கட்டுக்கட்டி பூந்தொட்டிகள் கட்டப்பட்டு அலங்கார மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

அதில் அப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இருந்த சுமார் 20 மீற்றர் தூரத்தில் இருந்த பகுதியே நேற்றிரவு எட்டு மணியளவில் கனரக (பெக்கோ) வாகனம் மூலம் இனம்தெரியாத நபர்கள் இடித்து அழித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஆர்.பி.என்.பால சூரியாவிடம் கேட்டபோது இது தொடர்பில் எந்தவிதமான முறைப்பாடும் தமக்கு கிடைக்கவில்லை என கூறினார்.

இது தொடர்பில் யாழ்.மாநகர சபை ஆணையாளரிடம் வினாவிய போது யாழ்.மாநகர சபையினரால் பூந்தொட்டிகள் இடிக்கப்படவில்லை எனவும், தாம் இது தொடர்பில் சனிக்கிழமை (07) யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் இடம்பெற்ற இடம் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு 20 மீற்றர் தூரத்திலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X