2021 மே 18, செவ்வாய்க்கிழமை

சுதந்திர தினத்தில் மதுபானம் விற்றவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுதந்திர தினத்தன்று மதுபானம்  விற்பனை செய்த 48 வயதுடைய நபருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், செவ்வாய்க்கிழமை (10) தீர்ப்பளித்தார்.

கடந்த 4ஆம் திகதி ஊர்காவற்துறைப் பகுதியில் வைத்து மதுபானம் விற்பனை செய்த போது, குருநகரைச் சேர்ந்த குறித்த நபரை, ஊர்காவற்துறைப் பொலிஸார் கைதுசெய்தனர். இதன்போது 3 மதுபானப் போத்தல்களும் கைப்பற்றப்பட்டன.

நபருக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், வழக்கு செவ்வாய்க்கிழமை (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்தே நீதவான் மேற்பட அபராதத்தை விதித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .