Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
George / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கடலாமை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், செவ்வாய்க்கிழமை (10) தீர்ப்பளித்தார்.
அவர்களிடம் உயிருடன் மீட்கப்பட்ட 3 கடலாமைகளையும் கடற்படையினரின் உதவியுடன் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் மண்டைதீவு கடலில் விடுவதுடன் இறந்த கடலாமையை புதைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.
குருநகர் 5 மாடிக்குடியிருப்பை சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள், திங்கட்கிழமை(09) இரவு 4 கடலாமைகளுடன் கைது செய்யப்பட்டனர். அதில் ஒரு கடலாமை உயிரிழந்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025