2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

கசூரினாவில் கலாட்டா

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

காரைநகர், கசூரினா கடற்கரையில் மதுபோதையில் நின்றிருந்த இளைஞர் குழுவொன்றால் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை குழப்பநிலை ஏற்பட்டது. அப்பகுதியில் படகுச் சேவையை மேற்கொள்ளும் இளைஞர்கள், குழப்பத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து நையப்புடைத்தனர்.

கடற்கரைக்கு சென்ற 5பேர், மதுபோதையில் தள்ளாடியபடி இருந்ததுடன், அங்கு நின்றவர்களை தூசன வார்த்தைகளால் ஏசியுள்ளனர். வெளிநாட்டிலிருந்து வருகை தந்திருந்தவர்களையும் இவர்கள் தூசன வார்த்தைகளால் பேசினர். இதன்போது அக்குழுவில் இருந்த இளைஞர்கள் சிலர், மதுபோதையில் நின்றிருந்தவர்களுடன் முரண்பட்டனர்.

மதுபோதையில் நின்றிருந்தவர்கள் கைகலப்பில் ஈடுபட முனைந்த நிலையில், அங்கு சென்ற படகு சேவையை நடத்தும் இளைஞர்கள், மதுபோதையில் நின்றவர்களைப் பிடித்து நையப்புடைத்தனர். மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது, அங்கு கடமையில் பொலிஸார் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .