2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

தபால் பொதிகள் கொள்ளை

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன்

சாவகச்சேரி தபால் நிலையத்திலிருந்து தனக்கிளப்பு தபால் நிலையத்துக்கு இன்று புதன்கிழமை (05) கொண்டு செல்லப்பட்ட போது பறித்துச்செல்லப்பட்ட தபால் பொதிகள் சிலவற்றை, தனக்கிளப்பு பகுதியிலிருந்து மீட்டதாக  சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

தபால் ஊழியர்களால் கொண்டுசெல்லப்பட்ட இந்தப் பொதிகளை மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் தபால் ஊழியர்களால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.  

இந்நிலையில், தனக்கிளப்புப் பகுதியில் இரண்டு தபால் பொதிகள் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். அங்கு பொலிஸாருடன் சென்ற தபால் ஊழியர்கள் அவற்றை மீட்டனர்.

பொதிகளில் இருந்த அனைத்து தபால்களும் அப்படியே இருப்பதாக தபால் ஊழியர்கள் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .