Thipaan / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி நீதிமன்றத்தின் செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, ஒலியை எழுப்பியவாறு மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதுடன் ஆபத்தான முறையில் வாகனம் ஒன்றை முந்திச் சென்ற நபருக்கு 4,500 ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், வியாழக்கிழமை (06) தீர்ப்பளித்தார்.
மேலும், குற்றவாளியின் சாரதி அனுமதிப்பத்திரத்தை 3 மாதகாலங்களுக்கு இடைநிறுத்தியும் நீதவான் உத்தரவிட்டார்.
கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த நபருக்கு எதிராக 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதுடன், ஆபத்தான முறையில் வாகனத்தை முந்திச் சென்றமைக்கு 1,500 ரூபாயும் ஒலி எழுப்பியமைக்காக 3000 ரூபாயும் சாரதி அனுமதிப்பத்திர இடைநிறுத்தியும் தண்டனைகள் விதிக்கப்பட்டன.
54 minute ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
8 hours ago
8 hours ago