2021 மார்ச் 06, சனிக்கிழமை

வேப்பமரங்களை வெட்டியவர் கைது

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வனப்பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான காட்டுப்பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து மூன்று வேப்பமரங்களை வெட்டிய நபரொருவரை, புதன்கிழமை (05) கைது செய்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவத்தினர் வழங்கிய தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிஸார், மூன்று வேப்பமரங்கள் வெட்டப்பட்டு சிறிய உழவு இயந்திரத்தில் ஏற்றப்பட்ட நிலையில் மீட்டுள்ளதோடு, அதே பகுதியினைச் சேர்ந்த 26 வயதுடைய நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதான சந்தேக நபரையும் பொருட்களையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .