2021 மார்ச் 04, வியாழக்கிழமை

மாலைதீவாக மாற்றியமைப்பதே எமது எதிர்காலத்திட்டம்: டக்ளஸ்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெடுந்தீவை அபிவிருத்தியால் கட்டியெழுப்பி குட்டி மாலைதீவாக மாற்றியமைப்பதே எமது எதிர்காலத்திட்டமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நெடுந்தீவு தேவாமண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (13) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இங்குள்ள மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகளை ஏற்கெனவே நான் அறிந்துள்ள நிலையில் அவற்றில் பெரும்பாலானவைக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

அநேகமாக அடுத்த மாதம் முதல் நெடுந்தீவு வாழ் மக்கள் அனைவருக்கும் இத்திட்டத்தின் ஊடாக சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்ள முடியும். 

இவ்வாறாக நெடுந்தீவில் முக்கிய அபிவிருத்திகளை முன்னெடுத்து வளப்படுத்துவதன் ஊடாக இங்குள்ள மக்கள் அனைவரும் தமது சொந்த கால்களில் வாழ முடியுமென்ற நம்பிக்கை எமக்குள்ளது.

இதேபோன்று சின்னபாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் பெரிய பாலத்தை பொருட்களை ஏற்றி இறக்குவதற்கும் ஏற்றவகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .