2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

மீண்டுமொரு புரட்சியை வேண்டி நிற்கின்றோம்: சுமந்திரன்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகம் வியந்த ஒரு புரட்சியை ஜனவரியில் தமிழ் மக்கள் நிகழ்த்திக் காட்டியதால் வருகின்ற தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக, இன்னொரு புரட்சியை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது என்று யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

கரவெட்டி கிளவிதொட்டம் பிள்ளையார் கோயில் முன்றலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் என்பது அரசியல் தீர்வுக்கான தேர்தல் அல்ல. நாட்டில் நிலவிய சர்வாதிகார ஆட்சியை மாற்றவேண்டும் என்பது நமது அத்தியாவசிய தேவையாக இருந்தது. அதற்கும் இனப்பிரச்சினை தீர்வுக்கும் நேரடி சம்மந்தம் இருக்கவில்லை. ஆனால், இனப்பிரச்சினை தீர்வு ஏற்பட வேண்டுமாக இருந்தால் முதலாவது பெரிய தடங்கலை அகற்ற வேண்டும்.

நீங்கள் இன்னொரு அரசியல் புரட்சியை நிகழ்த்திக் காட்ட வேண்டியுள்ளது. அந்த புரட்சி எங்களுக்காக அல்ல, உங்களுக்காக. எனவே,உங்களின் உரிமைக்காக நீங்கள் வாக்களிக்க வேண்டியுள்ளது என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .