2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் சிறுவன் கைது

Thipaan   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

6.396 மில்லிகிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள பிரபலமான பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் பாடசாலை மாணவனை அரச சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன,; வியாழக்கிழமை (20) உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சிவில் உடையில் சென்ற பொலிஸார் குறித்த சிறுவனை புதன்கிழமை (19) இரவு பொம்மைவெளி பகுதியில் வைத்து கைது செய்தனர்.

கைதான சிறுவனை யாழ். சிறுவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது நீதவான் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்க உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .