2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

சுபாஷ் ஹோட்டல் பெப்ரவரி 26இல் உரிமையாளரிடம் கையளிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 10 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நகரப் பகுதியில் இராணுவத்தின் முக்கிய தளமான 51ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைந்துள்ள சுபாஷ் ஹோட்டலை எதிர்வரும் பெப்ரவரி மாதம்  26ஆம்  திகதி உரிமையாளரிடம் கையளிக்கவுள்ளதாக யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற  ஊடகவியலாளர்கள்; மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு   மேலும் தெரிவிக்கையில்,

இராணுவத்தின் 51ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைந்திருக்கும் பகுதியிலுள்ள அனைத்து தனியார் கட்டடங்களும்  கடைத்தொகுதிகளும் யாழ். மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், 51ஆவது படைப் பிரிவின் தலைமையகம் நகரப்பகுதிக்கு வெளியேயுள்ள இடத்திற்கு மாற்றப்படவுள்ளது.

யாழ். நகர மத்தியிலுள்ள இராணுவ முகாம்கள் அனைத்தும் அகற்றப்படவுள்ளதுடன்,  பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

யாழ். மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இராணுவத்தினருக்கு உண்டு என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X