2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

30 நிமிடங்களில் 7 பேரை கடித்த நாய்கள்

Kanagaraj   / 2013 ஜூலை 28 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நாய்க்கடிக்கு இலக்காகிய நிலையில் 30 நிமிடங்களுக்குள் ஏழுபேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது.

யாழ். நகரப் பகுதியிலேயே இன்று காலை வேளையில் சுமார் 30 நிமிடங்களுக்குள் நாய்க்கடித்துள்ளது.

அதில் ஒரு நாய் 5 பேரையும், நீர்வேலி பகுதியில் மற்றொரு நாய் இரண்டு பேரையும் கடித்துள்ளது.

நாய் கடிக்கு இலக்காகி படுகாயடைந்த நிலையில், என். சுப்பிரமணியம் (வயது 72) ரி. தர்ஷpகா (வயது 3) ரி. பரமேஸ்வரன் (வயது 69) சிவகுமாரன் லோரன்ஸ், செல்வநாயகம் போஜினி (வயது 23) தவேந்திரன் ரவீந்திரன் (வயது 38) ஆகியோரே யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--