2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

நல்லூர் ஆலயச் சூழலில் 300 பொலிஸார் கடமையில்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)

நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாவை முன்னிட்டு திருவிழாக் காலங்களில் தினமும் ஆலயச் சூழலில் 300 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நெவில் பத்மநேவா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:-

நல்லூர் ஆலயத் திருவிழாக் காலங்களில தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், திருட்டுக்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு ஆலயச் சூழலில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் உடையிலும் சிவிலிலும் இவர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

விசேட திருவிழாக் காலங்களில் மேலும் பொலிஸாரின் எண்ணிக்கையை அதிகரித்து ஆலயச் சூழலில் கடமையில் ஈடுபடுத்தவுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X