Super User / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
வவுனியாவில் 4 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படவுள்ள 4 ஆடைத் தொழிற்சாலைகளில் கடமையாற்றுவதற்கு எந்த மாவட்டத்தில் இருந்தும் விண்ணப்பிக்க முடியும் என்று வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி எச்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் வவுனியாவில் 4 ஆடைத் தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.
இதற்கான ஊழியர்கள் தெரிவுசெய்யப்படவுள்ள நிலையில், வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கு எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கமுடியும் என்றும், குறித்த பிரதேச செயலர்களுடன் தொடர்பு கொண்டு 'அரச அதிபர், வவுனியா' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
9 hours ago
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Dec 2025
14 Dec 2025