2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

யாழ். மாநகரசபைக்கு 5 பஸ்கள் கையளிப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

(ராஜா)

இலங்கை இந்திய நட்புறவுச் சங்கம் யாழ். மாநகர சபைக்கு 5 பஸ்களைக் கையளித்துள்ளது.

இவற்றை சாரதிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று யாழ். மாநகரசபையில் நடைபெற்றது. பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா பஸ்களை சாரதிகளிடம் கையளித்தார்.

தலா 17 லட்சம் ரூபா பெறுமதியான பஸ்களே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்துச் சபையின் சேவைகள் இடம்பெறாத வழித்தடத்தில் இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். நகரில் இருந்து கொழும்புத்துறை, திருநெல்வேலி, கல்வியங்காடு, கச்சேரி,காக்கைதீவு, நாவாந்துறை ஆகிய பகுதிகளில் இச்சேவைகள் இடம்பெறவுள்ளன.

பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்காக விசேட சேவையாக இது நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

altaltaltalt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .