Kogilavani / 2011 ஜனவரி 12 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நகரிலுள்ள 51ஆவது படையணித் தலைமையகம் சீனாவின் உதவியுடன் இம்மாத இறுதியில் கோப்பாய்பகுதிக்கு இடமாறவுள்ளதாக பலாலி படைகளின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்.விக்டோரியா வீதியில் சுபாஸ் விடுதி மற்றும் அப்பகுதியில் உள்ள தனியார் கட்டடங்களில் 51ஆவது படையணித் தலைமையகம் இயங்கி வருகிறது. இந்தப் பிரதேசத்தை பொது மக்களிடம் கையளிக்கும் நோக்குடன் அந்த தலைமையகத்தை கோப்பாய்க்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோப்பாயில் உள்ள அரச காணியில் சீன அரசின் உதவியுடன் தயார் நிலையிலான கட்டடப் பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள முகாமுக்கே தலைமையகம் மாறுகிறது என்றும் இந்த மாத இறுதிக்குள் தலைமையகம் மாற்றப்பட்டு, அந்தப் பகுதி மக்களிடம் கையளிக்கப்படும் என்று பலாலி ஊடகப் பிரிவு நேற்று இரவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .